இரசாயன உரங்களின் பயன்பாடு குறைப்பு பயிற்சி முகாம்

65பார்த்தது
நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா). , திட்டத்தின் கீழ் ‘’ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் குறைக்கப்பட்ட இரசாயன உரங்களின் பயன்பாடு‘’ குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்து வேளாண்மைத்துறையின் மத்திய மாநில அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

நாமக்கல் மாவட்ட துணை வேளாண்மை இயக்குநர். , உழவர் பயிற்சி நிலையம். , கோவிந்தசாமி முன்னிலை வகித்து அட்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சிகள். , செயல் விளக்க திடல்கள். , பண்ணைப்பள்ளி. , கண்டுணர்வு பயணம். , விவசாயிகள் வேளாண்மை விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடுகள் மண்புழு உரம் தயாரிப்பு. , களர். , உவர் நிலச்சீர்திருத்தம். , ரசாயன உரங்களின் அளவை குறைத்து கரிமச்சத்து அதிகரிக்க இயற்கை இடுபொருட்களை பயன்பாடு குறித்து பயிற்சியளித்தார்.

வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர். இரமேஷ் அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள். கவிசங்கர் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் வருகைபுரிந்த விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி