ரூ. 9. 30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

82பார்த்தது
பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9 லட்சத்து 30 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்போனது.

கடந்த வார வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 11 ஆயிரத்து 590 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அப்போது அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 94. 90-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 90. 10-க்கும், சராசரியாக ரூ. 93. 33-க்கும் கொப்பரை ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 86. 77-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 74. 88-க்கும், சராசரியாக ரூ. 82. 83-க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 10 லட்சத்து 85 ஆயிரத்து 750-க்கு ஏலம் போனது.

நிகழ்வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 10 ஆயிரத்து 580 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 94. 59-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 90. 99-க்கும், சராசரியாக ரூ. 92. 97-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிக பட்சமாக ரூ. 85. 99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 78. 88-க்கும், சராசரியாக ரூ. 83. 19-க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 9 லட்சத்து 30 ஆயிரத்து 575-க்கு ஏலம்போனது.

தொடர்புடைய செய்தி