பல்வேறு அமைப்பினர் அதிமுகவிற்கு ஆதரவு.

58பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த கோவிந்தம்பாளையத்தில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளரும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும் தேர்தல் பொறுப்பாளருமான தங்கமணி அவர்களை தமிழக தேசிய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மாநில தலைவர் கே. ஆர். சுப்பிரமணி, இந்து இஸ்லாம் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஜெயலானி , தமிழ்நாடு மக்கள் சமதர்ம கட்சியின் தலைவர் கார்திகேயன், அருந்ததியர் மக்கள் பேரவையின் மாநில தலைவர் டாக்டர் குருவை குமார், தீரன் சின்னமலை கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் காங்கேயம் குமார் , தமிழ்நாடு அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் திருப்பதி ஆகியோர் முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தங்களது ஆதரவினை தெரிவித்தனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்கள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி