காவிரி கரையோர பகுதிகளில்  மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

71பார்த்தது
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில்  மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

 
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் நிரம்பி, காவிரி ஆற்றில் ஒரு லட்சத்திற்கும் மேலான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும்  மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டி, நகராட்சி சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான மணிமேகலை தெரு, பாலக்கரை, அண்ணா நகர், கலைமகள் வீதி உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அங்குள்ள பொதுமக்களை சந்தித்து, மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டி கேட்டுக்கொண்டார். குடியிருப்பு வாசிகள் வேறு இடம் கேட்டு கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் தங்க வைக்க கூடிய பாதுகாப்பு மையங்களை ஆய்வு செய்து, நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

தொடர்புடைய செய்தி