குமாரபாளையம்: ஆபத்தான முறையில் வைக்கப்பட்ட பேனர்கள்

1903பார்த்தது
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால் கத்தேரி பிரிவு சர்வீஸ் சாலை வளைவு பகுதியில் பிளெக்ஸ் பேனர்கள்,  கொடிக்கம்பங்கள், கடை விளம்பரங்கள் என ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், வாகனங்கள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.

ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் நிலை மாற, உடனே இந்த இருபுற சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,  போக்குவரத்து போலீசார் சிப்ட் முறையில் செயல்பட்டு, இரவு பகலாக போக்குவரத்து சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடையூராக இருக்கும் பேனர்கள் அகற்றப்பட்டு, இங்கு பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி