குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் துரைசாமி தலைமையில், தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. நூற்றுக்கு மேற்பட்டோர் கடந்த ஒரு வருட காலமாக வீட்டுமனை பட்டாக்கோரி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததால், கல்லங்காட்டுவலசு மற்றும் பல்லக்காபாளையம் பகுதியை சேர்ந்த 148 குடும்பத்தினர் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தினர். குடிநீர், சாக்கடை, மருத்துவமனை உள்ளிட்ட வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டம் இரவு 08: 30 வரையில் நீடித்தது.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் துரைசாமி கூறியதாவது:
திருச்செங்கோடு ஆர். டி. ஒ. சுகந்தி, டி. எஸ். பி. இமயவரம்பன் நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறிய பின், போராட்டகாரர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.