

பஞ்சலோக சிலையுடன் மடாதிபதி யாத்திரை
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன சைவம் மடத்தை பதினாறாம் நூற்றாண்டில் குரு முதல்வர் குருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். அவர் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐம்பொன்னில் செய்யப்பட்ட அவரது சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தர்மபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பஞ்சலோக சிலையுடன் யாத்திரையாக புறப்பட்டார்.