மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஸ்ரீ திருநிலை நாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் எனப்படும் சட்டை நாதர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு கோபூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்து விநாயகர் நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து கோசாலையில் இருந்து வரவழைக்கப்பட்ட பசு மற்றும் கன்றிற்கு சிறப்பு பூஜைகள் செய்து வாழைப்பழம், அகத்திக்கீரை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.