தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த வசந்தகுமாரி (56) என்பவர் தனது உறவினரான பாலமுருகனுடன் மயிலாடுதுறை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சித்தர் பாடல் மெயின் ரோட்டில் எதிரே வந்த தனியார் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் வசந்தகுமாரி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாலமுருகன் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் பேருந்து ஓட்டுனர் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.