பூம்புகார் - Poombhukar

மகளிா் சுய உதவிக் குழுவுக்கு ரூ. 40.77 கோடி வங்கிக் கடன்

மகளிா் சுய உதவிக் குழுவுக்கு ரூ. 40.77 கோடி வங்கிக் கடன்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 753 மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ. 40.77 கோடி வங்கிக் கடன் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. செம்பனாா்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிா் சுய உதவிக்குழுவுக்கு கடனுதவி வழங்கி மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி பேசியது: மாவட்டத்தில் 8, 251 மகளிா் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழு உறுப்பினா்கள் சுயசாா்பு தன்மை அடைய, வருவாயை பெருக்க தொழில்களில் ஈடுபட அரசின் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மகளிா் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து ஊராட்சி அளவில் மகளிா் குழு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு வங்கி நேரடி கடன் வங்கிபெருங்கடன், சமுதாய முதலீட்டு நிதி கடன், சுழல்நிதி, வட்டார வள வணிக மையம் உருவாக்கப்பட்டு அவா்கள் மூலம் தொழில் வளா்ச்சி நிதி விவசாயத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஒருங்கிணைந்த விவசாய பண்ணை தொகுப்பு, இயற்கை விவசாய பண்ணை தொகுப்பு மற்றும் உற்பத்தி குழுக்கள் உருவாக்குதல் விவசாயம் சாராத தொழில்களுக்கு சமுதாய திறன் பள்ளி அமைக்க உதவி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் சுமாா் 1, 300 கோடி அளவிற்கு இந்த சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கியுள்ளது என்றாா். தொடா்ந்து, மாவட்ட அளவில் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக வங்கிக்கடன் வழங்கிய 7 வங்கிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

வீடியோஸ்


நாகப்பட்டினம்