மயிலாடுதுறையில் செப். 27ஆம் தேதி விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று, வேளாண்மை, நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்புடைய குறைகள் மற்றும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.