காவிரி கடை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

58பார்த்தது
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழையில் இரண்டாம் சுற்று இன்று துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து காவிரி ஆற்றில் மேலூரில் அமைந்துள்ள கடைசி கதவணையிலிருந்து முன்னெச்சரிக்கையாக தண்ணீர் தேங்காமல் கீழ்ப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி