சென்னை பள்ளிக்கரணை மேடவாக்கம் 100அடி சாலையில், கார் ஓட்டுநர் ஒருவர் மது அருந்திக்கொண்டே வாகனத்தை ஓட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு கையில் பீர் பாடில், மற்றொரு கையில் கிளேஸ் வைத்துள்ளார். கார் ஓட்டும்போதே தனது இரண்டு கைகளையும் எடுத்துவிட்டு, பீரை கிளாசில் ஊற்றி குடிக்கிறார். இந்த ஆபத்தான பயணம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.