சாராஸ் டே என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவராக திகழும் சாரா ஸ்டீவன்சன் என்ற பெண் படகில் தனது குழுவினருக்கு விருந்து வைத்த போது தாய்ப்பாலை பரிமாறிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்விருந்தில் சாரா தனது தாய்ப்பாலை பம்ப் செய்து ஒரு கிளாசில் எடுத்து குழுவில் ஒருவருக்கு வழங்குகிறார். அதனை குடிக்கும் பெண், கடவுளே என கூறிவிட்டு சிரிக்கிறார். தொடர்ந்து மற்றவர்களுக்கும் சாரா தாய்ப்பாலை பரிமாறியுள்ளார்.