விழுப்புரம்: திண்டிவனத்தில் திமுக சார்பில், அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு நின்றிருந்த போது, திமுக கவுன்சிலரின் கணவர் குணசேகரன் என்பவருக்கும் முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த பாலத்தை சீரமைத்தது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.