தேசிய நெடுஞ்சாலையில் முட்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி

53பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சி வழியே சென்னை - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சென்னை, புதுச்சேரியில் இருந்து காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் பிரதான சாலையாகவும் இந்தச் சாலை அமைந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சாலையின் இரு புறங்களிலும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி