தமிழக மீனவா்கள் 37 போ் இலங்கை கடற்படையினரால் கைது

74பார்த்தது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, 3 படகுகளுடன் தமிழக மீனவா்கள் 37 பேரை இலங்கை கடற்படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு மற்றும் சக்திவேல், செல்வம் ஆகியோரது 2 ஃபைபா் படகுகளில் மொத்தம் 37 மீனவா்கள், பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனா்.

இவா்கள், நெடுந்தீவு கடற்பரப்பில் சனிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக 3 படகுகளையும் பறிமுதல் செய்து, 37 மீனவா்களையும் கைது செய்தனா்.

பின்னா், காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு மீனவா்களை அழைத்துச் சென்றனா்.

கைது செய்யப்பட்ட 37 பேரிடமும் இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, அவா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 22) காலை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை செய்தி தொடா்பாளா் தெரிவித்தாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி