மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று(ஆக.27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மீனவர்கள் கைது செய்யப்படுவது நீடிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி மாறினால் ஈழப் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று பலர் கூறினர். ஆனால் ஆட்சி மாறி பத்து ஆண்டுகள் ஆனது. இருப்பினும் தமிழக மீனவர்கள், ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மீனவர்கள் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.