மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இன்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து முன்னாள் அமைச்சர் கோ. சி. மணி அவர்களின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கிருபாவளத்துறை சோதனை சாவடி பகுதியில் பிரம்மாண்ட நுழைவு வாயில் அமைத்து எல்லை முதல் குத்தாலம் வரை சாலையின் இருபுறமும் திமுக கொடிகள் நட்டு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் குத்தாலம் பகுதியில் குவிந்துள்ளனர்.