மயிலாடுதுறை அருகே மேலூரில் தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்த ரோஷினி ராஜாமால் என்ற மாணவி பள்ளி முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனைக்கு மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.