தியேட்டர் பணியாளர்களுக்கு மரியாதை

84பார்த்தது
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த பியர்லெஸ் திரையரங்கம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த திரையரங்கமானது நேற்று முதல் மூடப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கேள்விப்பட்ட மயிலாடுதுறை சினிமா ரசிகர்கள் ஏராளமானோர் தியேட்டருக்கு நேற்று வருகை புரிந்து செல்பி எடுத்து பழைய கதைகளை பேசி நினைவுகளில் ஆழ்ந்தனர். தொடர்ந்து தியேட்டரில் பணியாற்ற கூடியவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :