ராஜகாளியம்மன் பந்தல் காட்சி

72பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் இருபதாம் ஆண்டு திரு நடன உற்சவ திருவிழா கடந்த பத்தாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை அடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று ராஜகாளியம்மன் பந்தல் காட்சி அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி