நாகை மாவட்டத்துக்கு இன்று (நவ., 29) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலாக வலுப்பெற்று அது கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.