ஆடிப்பூர மகோற்சவ கொடியேற்றம்

85பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆடி போற மகோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடிமரத்திற்கும் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்ட சிம்ம லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தர்மபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி