மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு தனியார் வெடி கிடங்கில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியாளர் கர்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெடி விபத்து குறித்த உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.