மயிலாடுதுறை: இசைவாணி மீது பாஜக புகாா்

81பார்த்தது
மயிலாடுதுறை பாஜக மாவட்ட துணைத் தலைவர் மோடி. கண்ணன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளர் நாஞ்சில் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனு: கானா பாடகி இசைவாணி ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பொது மேடையில் இந்து கடவுள் சுவாமி ஐயப்பனை கார்த்திகை மாதத்தில் விரதம் மேற்கொண்டுள்ள ஐயப்ப பக்தர்களின் மனம் புண்படும்படி கானா பாடல் பாடியுள்ளார். அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பெரியாரின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர். மதநல்லிணக்கத்துக்கு எதிராக இந்து கடவுளை அவமதித்து பாடல் பாடிய பாடகி இசைவாணி மீது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதோடு அந்த பாடலை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி