நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் திருமால் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த விவசாயிகள் குறை தீர்ப்ப கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மை துறை, பொதுப்பணிகள் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.