நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு வரும் 16-ந் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது. இந்த பயணத்திற்கு சிவகங்கை என்ற கப்பல் தயாராக உள்ளது. இந்த சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பயணிக்க ஒரு நபருக்கு 7,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.