UPSC தேர்வில் வெற்றி பெற உதவிய ‘நான் முதல்வன்’ திட்டம்

75பார்த்தது
UPSC தேர்வில் வெற்றி பெற உதவிய ‘நான் முதல்வன்’ திட்டம்
2023ம் ஆண்டிற்கான UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் 2ம் இடமும், இந்திய அளவில் 78வது இடமும் பிடித்த மருத்துவர் பிராசந்த் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஜூன் 2022ம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் முடித்தேன். ஆகஸ்ட் 2022ல் தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினேன். 8 மாதங்களில் இலக்கை எட்டுவதற்கு ‘நான் முதல்வன்’ திட்டம் எனக்கு உதவியாக இருந்தது. இந்த தருணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி