சாலையில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் - எட்டி உதைத்த போலீஸ்

65பார்த்தது
டெல்லியில் சாலையோரம் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு நேரமானதால் சாலையிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை காவல்துறை அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைக்கிறார். இதனிடையே, குறிப்பிட்ட காவல் அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு டெல்லி காவல்துறை துணை ஆணையர் மனோஜ் மீனா தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி