பத்திரிகையாளர் மீது தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்

58பார்த்தது
பத்திரிகையாளர் மீது தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்
திருப்பூர் பகுதி செய்தியாளர் நேசபிரபுவை, சமூக விரோதிகள் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ள செய்தியறிந்து, மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேசபிரபு, விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக அரசில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வியடைந்துள்ளது. ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். திமுக அரசின் தோல்விகளை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைத்து, மயிலிறகால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி