கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை

84230பார்த்தது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை தனது ஆண் நண்பர் மூலம் மனைவியே கார் ஏற்றிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (37). இவரது மனைவி பிரியா(32). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். புத்தாண்டு அன்று பிரேம்குமார் பைக்கில் செல்லும்போது பின்னால் வந்த கார் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஹரி கிருஷ்ணன் (30) என்பவருடன் பிரியாவுக்கு தகாக உறவு இருந்துள்ளது. இதற்கு கணவன் இடையூறாக இருப்பதாக கூறி கார் ஏற்றி அவரை கொலை செய்தது தெரியவந்தது.