இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும், வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தற்போது தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தேசியக் கொடியை முகப்பு படமாக மோடி வைத்து உள்ளார். மேலும், அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக, ஆகஸ்ட் 9 முதல் 15ஆம் தேதி வரை மக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தி இருந்தார்.