பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் நாட்டு மக்களிடையே ராணுவத்தளபதி வக்கார் உஸ்-ஜமான் உரையாற்றி வருகிறார். வங்கதேசத்தில் இடைக்கால அரசை அந்த நாட்டின் ராணுவம் அமைப்பதாக அவர் கூறியுள்ளார். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். இந்நிலையில் ராணுவம் ஆட்சியமைக்கிறது. இதனிடையே ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக வக்கார் உஸ்-ஜமான் உறுதிப்படுத்தியுள்ளார்.