சூடான் தலைநகர் கார்ட்டூம் அருகே உள்ள நகரம் ஓம்டுர்மன். இதன் அருகே உள்ள ராணுவ விமான தளத்தில் இருந்து விமானம் புறப்பட்டபோது 'அன்டோனோவ்' என்ற விமானம் விபத்துக்குள்ளானது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.