மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் சுமார் 53 பேர் இறந்துள்ளனர். இந்த விவரங்களை உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், நோய் அறிகுறி தோன்றிய 48 மணி நேரத்திற்குள் நோயாளி இறந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. இது தற்போது காங்கோவில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயின் அறிகுறிகளின் அடிப்படையில், ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவக் குழுவினர் இதனால் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.