திடீர் டெல்லி பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைக்கவே இபிஎஸ் டெல்லி சென்றுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், டெல்லிக்கு வருகை தந்த எடப்பாடியிடம் செய்தியாளர்கள் முக்கிய நபரை சந்திக்க திட்டமா என்று கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், டெல்லியில் உள்ள அதிமுக புதிய தலைமை அலுவலகத்தை பார்க்க வந்துள்ளேன் என்று பதிலளித்துள்ளார்.