‘கில்லி’யை தொடர்ந்து களமிறங்கும் ‘மாஸ்டர்’

69பார்த்தது
‘கில்லி’யை தொடர்ந்து களமிறங்கும் ‘மாஸ்டர்’
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியானது ‘மாஸ்டர்’. இந்த படத்தின் ஓவர்சீஸ் உரிமையை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியது. இந்த நிலையில், மாஸ்டர் படம் ஐரோப்பாவில் ரீ - ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கில்லி படம் தமிழ்நாடு முழுவதும் ரீ - ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்ததாக ஐரோப்பா பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் படம் வசூல் சாதனை படைக்க காத்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி