பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் முதல் முறையாக பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். பாக்கர் ஹரியானா மாவட்டத்தின் கோரியா கிராமத்தில் 2002ல் பிறந்தவர். தன்னுடைய 14 வயது வரை குத்துச்சண்டை, டென்னிஸ் மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய அவர் பின்னர் துப்பாக்கி சுடுதலை தன் வாழ்க்கை லட்சியமாக்கி கொண்டார்.