மனோஜ் மறைவுக்கு Dy CM பவன் கல்யாண் இரங்கல்

58பார்த்தது
மனோஜ் மறைவுக்கு Dy CM பவன் கல்யாண் இரங்கல்
நடிகர் மனோஜ் பாரதி மறைவுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இரங்கல் செய்தி அனுப்பியுள்ள அவர், பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜின் திடீர் மரணச் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஒரு நடிகராக சிறந்து விளங்கும் அதே வேளையில், இயக்குநராக தனது தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றி வந்த அவர் மாரடைப்பால் மறைந்தார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதித்துள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி