கோவை வளர்ச்சியைப் பற்றி பேச தயாரா? அண்ணாமலைக்கு சவால்

75பார்த்தது
கோவை வளர்ச்சியைப் பற்றி பேச தயாரா? அண்ணாமலைக்கு சவால்
கோவையில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகk கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வில்பேசிய கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு சவால் விடுத்தார். அவர் பேசுகையில், அண்ணாமலைக்கு ஒரு சவால். கோயம்புத்தூரில் இல்லை எங்கு வேண்டுமானாலும் மேடை போடுங்கள். என்ன மொழியில் வேண்டுமானாலும் பேசலாம். எத்தனை பேரை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். கோயம்புத்தூர் வளர்ச்சிக்காக பேச நான் தயார். அண்ணாமலை தயாரா..? தயார் என்றால் நேரம், நாள், இடம் குறியுங்கள். வருகிறேன் என்றார்.

தொடர்புடைய செய்தி