சமூகவலைதளங்களில் சில வீடியோக்கள் திடீரென வைரலாகும். அதுவும் வனவிலங்குகள் தொடர்பான வீடியோ அதிக அளவில் பார்வையாளர்களால் பகிரப்படும். அந்த வகையில் அண்மையில் வெளியான வீடியோவில் வனப்பகுதியில் சலனமற்ற நிலையில் இருக்கும் மானைச் மலைப்பாம்பு இறுக்கமாகச் சுற்றியது. மலைப்பாம்பு தனது உறுதியான பிடியைத் தக்க வைக்க, மரக்கிளையைப் பயன்படுத்தி அதை நபர் ஒருவர் தாக்கினார். பின்னர் மலைப்பாம்பு அதன் பிடியை விடுவித்ததால் மான் தப்பி ஓடியது.