ரூ.100 கோடி வசூல் செய்த மகாராஜா?

66பார்த்தது
ரூ.100 கோடி வசூல் செய்த மகாராஜா?
விஜய் சேதுபதி நடிப்பில், கடந்த மாதம் ஜூன் 14ஆம் தேதி வெளியான "மகாராஜா" திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படம், இந்தியாவில் ரூ.76 கோடி, வெளிநாடுகளில் ரூ.24 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், இந்த ஆண்டு வெளியான "அரண்மனை 4" படத்தின் வசூலை பின்னுக்குத் தள்ளியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

தொடர்புடைய செய்தி