உசிலம்பட்டி - Usilampatti

உசிலம்பட்டி: அதிமுக வீறுகொண்டு எழும் - முன்னாள் அமைச்சர் பேச்சு

உசிலம்பட்டி: அதிமுக வீறுகொண்டு எழும் - முன்னாள் அமைச்சர் பேச்சு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று (நவ. 9)முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயக்குமார், அதிமுகவை அசைத்து பார்க்க எவனும் இந்த மண்ணில் பிறக்கவில்லை, கருத்து வேறுபாடுகள் வரும் அது கால உலகத்தில் காணாமல் போய்விடும். அதிமுக என்ன இன்றைக்கு நேற்றா கருத்து வேறுபாடுகளை சந்திக்கிறது, பல காலகட்டத்தில் கருத்து வேறுபாடுகளை சந்தித்து, கையாண்டு எழுந்து கொண்டு, கடந்து வந்துவிட்டோம். இப்போது செய்ய வேண்டியது எல்லாம் எடப்பாடியார் அவர்களை முதல்வராக்க வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல்களில் எப்போதுமே அதிமுக பின்னடைவைத் தான் சந்தித்திருக்கிறது. , எம்ஜிஆர். , காலத்திலும் அம்மா காலத்திலும் இது போன்ற பின்னடைவை நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்து இருக்கிறோம். ஆனால் சட்டமன்றம் என்று வந்துவிட்டால் அதிமுக வீறு கொண்டு எழுந்து வெற்றி வரலாறு படைக்கும், அதற்கு வரலாறும், புள்ளிவிவரங்களும் உள்ளன. அதற்காக 234 தொகுதியிலும் மிக விரைவில் வரலாற்று வெற்றியை மீண்டும் பெற்று தர, தேர்தல் வியூகங்களில் முதல் வியூகமாக 234 தொகுதிக்கும் வருகை தர உள்ளார், இது ஒரு வரலாற்று வருகையாக இருக்க இப்போது இருந்தே தொண்டர்கள் ஆயத்தமாக வேண்டும் என்றார்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా