உசிலம்பட்டி - Usilampatti

உசிலம்பட்டி: முறுக்கு வியாபார நஷ்டம்; கணவன் தற்கொலை

உசிலம்பட்டி: முறுக்கு வியாபார நஷ்டம்; கணவன் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பேரையூர் எம் கல்லுப்பட்டி எம். எஸ் புரத்தில் வசிக்கும் சுப்பையா மகன் பாண்டி(45) என்பவர் தனது மனைவி நடத்தி வந்த முறுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக மனவிரக்தியில் நேற்று (நவ. 9) காலை 9 மணி அளவில் விஷம் குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ. 9) மதியம் 12 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சசிகலா எம். கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా