மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்ட வருவாய்த்துறை மற்றும் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து தேர்தல் சிறப்பு சுருக்கமுறை திருத்ததிற்கான சிறப்பு முகாம் மற்றும் வாக்களிப்பதன் கடமை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உசிலம்பட்டி டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிசந்திரன் கொடி அசைத்து துவங்கி வைத்தார். இந்த பேரணி உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நிறைவுற்றது.
இப்பேரணியில் உசிலம்பட்டி வட்டாச்சியர் பாலகிருஷ்ணன், தேர்தல் பிரிவு துணை வாட்டாச்சியர் முத்துலட்சுமி, வருவாய் ஆய்வாளர் மணிரத்தினம், கிராம நிர்வாக அலுவலர் சக்திகுமார் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மார்கிரேட் கிரேசியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.