உண்ணாவிரத போராட்ட பிரச்சார வாகனத்தை துவக்கிய முன்னாள் அமைச்சர்

55பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கணூரணியில் வரும் 24ஆம் தேதி கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தின் பிரச்சார வாகனத்தை நேற்று உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயக்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்ததார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'தியாகத்தையும், உழைப்பையும், வரலாற்று சின்னங்களாக இருக்கும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை மாற்றும் முயற்சி நிர்வாக மாற்றம் என்று கடந்து செல்ல முடியாது, இது ஒரு தியாக வரலாற்றை அளிப்பதற்கான முயற்சி இதை வண்மையாக எடப்பாடி பழனிச்சாமி 17. 08. 2024 அன்று கண்டன அறிக்கை வெளியிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கை செய்தார்கள்.

இருந்த போதும் இந்த அரசு செவி சாய்க்கவில்லை, ஆகவே தான் நாங்கள் காவல்துறையில் உரிய அனுமதியை பெற்று வரும் 24. 08. 2024 அன்று செக்காணூரணியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். , அதிமுக அறவழியில் இன்று ஒட்டுமொத்த இந்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும், போராடி வருகிறது' என பேசினார்.

தொடர்புடைய செய்தி