உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு திருவிழா

85பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் உள்ள சுமார் 495 ஆண்டுகளுக்கு பின்பு ஜக்கம்மா கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜமீன்தார் பாண்டியன் மற்றும் சோலை ரவி அவர்கள் தலைமையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது. இதில் 800 க்கும் மேற்பட்ட காளை மாடுகளும் 400 வீரர்களும் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு சைக்கிள், பீரோ பொருட்களை வழங்கினர். மற்றும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் பரிசுகளை வழங்கப்பட்டது. இதில் 20 க்கு மேற்பட்ட வீரர்கள் மாடி முட்டியதில் காயம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு திருவிழாவை கண்டுகளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி