மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று (நவ. 24) மாலை ஒருவர் விஷம் அருந்தி மயக்க நிலையில் கிடப்பதாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கிடைக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹரிவிக்னேஷ், மருத்துவ உதவியாளர் அன்பு சந்திரன் அங்கு சென்றனர். விஷம் அருந்தி கிடந்தவரின் அருகில் வாகனம் செல்ல இயலாத நிலையில் வாகனத்தை ஒரு கி. மீ. , முன்பு நிறுத்தி விட்டு மயங்கி கிடந்தவரை அங்கிருந்தவர்களின் உதவியுடன் துாக்கி, முதலுதவி சிகிச்சை அளித்து திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போலீசாரின் விசாரணையில், விஷம் அருந்தியவர் தேனியை சேர்ந்த பாலா (45), என்பதும், இவர் சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்ப்பவர் என்றும் கடந்த 4 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என்பதும் தெரிய வந்தது.