கால்பந்து மைதானங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப்பெற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு மைதானங்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநாகராட்சி இந்த முடிவை கைவிட்டுள்ளது.